பிரான்ஸில் பாடசாலை வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பரபரப்பு
பிரான்ஸில் பாடசாலை வளாகம் ஒன்றில் இருந்து 800 கிலோ எடையுள்ள குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Drôme மாவட்டத்தில் உள்ள Jules Verne எனும் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இருந்து இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்து.
சிறியது, பெரியது என மொத்தமாக 200 வெடிகுண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது. அங்கு கிட்டத்தட்ட 800 கிலோ எடையுள்ள 200 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த வெடிகுண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டு, மாணவர்கள் வெளியேற்றப்ப்பட்டு வெடிகுண்டு அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 14 times, 1 visits today)





