அரசியல் இலங்கை செய்தி

தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை: அரச்சுனா எம்.பி.!

“இலங்கை என்பது ஒரு நாடு. தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த முறைமையை இல்லாதொழித்துவிட வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயம் தோற்கும். எனவே, அத்தேர்தலை நடத்துவார்களா என்பது தெரியாது. நடத்தப்பட்டால்கூட வடக்கில் நிச்சயம் தேசிய மக்கள் சக்தி மண்கவ்வும்.

அதேவேளை, இலங்கை என்பது ஒரு நாடு. இதனை கூறுவதால் அந்த கருத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எனக்கு எதிராக சேறு பூசலாம்.

தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பது பயன் இல்லை. 40 வருடங்கள் எமது காலத்தை நாசமாக்கிவிட்டோம்.

மக்களை இழந்துவிட்டோம். எனவே, அது பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை.

2002 இல் நான் மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே இருந்தேன். புலிகள் அமைப்பில் இணைவதற்குகூட முயற்சித்தேன். ஆனால் தற்போது அந்த நிலைப்பாடு மாறிவிட்டது.

எனினும், நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது. அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும். இனவாத அரசியல் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!