லியோ இடைவெளி நேரம் குறைப்பு… தியேட்டர் ஓனர்கள் அதிரடி தீர்மானம்
விஜய் நடித்துள்ள லியோ படம் காலை 9 மணிக்கே பல திரையரங்குகளில் 5 காட்சிகள் என ஒட்டுமொத்த ஷோக்களும் லியோ.. லியோ.. லியோ என போட உள்ள நிலையில், இரவு வரை அதிகப்படியான ஷோக்களை போட வேண்டி இருப்பதால் இடைவேளை நேரத்தை குறைப்பதாக தியேட்டர் ஓனர்கள் எல்லாம் ஒன்று கூடி முடிவெடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போ தியேட்டரில் விற்க தயாராக வைத்துள்ள பாப் கார்ன், பப்ஸ் எல்லாம் ஊசிப் போயிடுமே என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்ப, உட்கார்ந்திருக்கும் இடத்துக்கே டோர் டெலிவரி செய்ய கூடுதலாக ஆட்களை இறக்கும் ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிவிஆரில் வழக்கத்துக்கு மாறாக 15 நிமிட தாமதம் இன்றி ஆன் டைம்ல படத்தை போட்டு விடுவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
தியேட்டரில் பார்க்கிங் பிரச்சனை, பாத்ரூமில் தண்ணி வராத பிரச்சனை, ரோட்டில் டிராஃபிக் பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகள் நாளை அரங்கேற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
First Time in the History,a Film set to clock ₹10cr plus opening from Tamil Nadu, Karnataka, Kerala & Telugu states
Beyond HISTORIC, Adichath Yaaru #LEO From Tomorrow 👊 pic.twitter.com/q6ffsSUFQd
— ForumKeralam (@Forumkeralam2) October 18, 2023