பாலஸ்தீன ஜனாதிபதிக்கு அமெரிக்கா செய்த மோசமான செயல்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அடுத்த வாரம் 80வது ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள தயாராகிய போதிலும் அமெரிக்கா அதற்கு தடையாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
பாலஸ்தீன ஜனாதிபதி கலந்து கொள்ள விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
எனினும் ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள், வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர் இந்த மாநாட்டில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
இந்த உச்சிமாநாட்டில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)