போலந்தில் பொம்மையோடு பொம்மையாக நின்ற நபர் செய்த மோசமான செயல்
போலந்துத் தலைநகர் வார்சாவில் உள்ள கடைத்தொகுதியில் பொம்மை போல் நின்று நகையைத் திருட முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 22 வயது இளைஞர் கடைக்குள் நுழைந்ததும் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு ஜன்னல் அருகே பொம்மை போல் நின்றார். கண்காணிப்புக் கேமராக்களிடமிருந்தும் பாதுகாவல் அதிகாரிகளிடமிருந்தும் தப்புவதற்காக அவர் அவ்வாறு செய்ததாகக் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
பொம்மையோடு பொம்மையாக நின்ற அவரைக் கடை ஊழியர்களும் கவனிக்கவில்லை எனவும், வாடிக்கையாளர்களும் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
கடைத்தொகுதி மூடியதும் அவர் நகையைத் திருட முயற்சி செய்தார். அப்போது அவர் பாதுகாவல் அதிகாரியிடம் சிக்கினார். அவர் வேறொரு கடைத்தொகுதியிலிருந்தும் திருடியதாகவும் நம்பப்படுவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அந்த நபரை் மீது திருட்டுக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.