அமெரிக்க வரலாற்றில் மோசமான ஜனாதிபதி : பைடனை விமர்சிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க வரலாற்றில் ஜோ பைடன் மோசமான ஜனாதிபதி என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
10 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகளை அனுமதிக்கும் பைடனின் திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 3 இலட்சத்து 20 ஆயிரம் புலம்பெயர்ந்தோரை பைடன் நிர்வாகம் எப்படி ரகசியமாக நாட்டிற்குள் அனுப்பினார் என்பதை ஒரு அறிக்கை சமீபத்தில் வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பைடன் நிர்வாகம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை 43 நகரங்களில் சுதந்திரமாக உலவ அனுமதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)