உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் ஆஸ்ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் கூட, மறுபக்கம் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை அவர் தலைமையில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியைச் சந்திக்கவே இல்லை. இந்தப் போட்டிகளில் 8 வெற்றிகளையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தொடங்கும் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையை மீண்டும் வெல்ல விரும்பும் அதே வேளையில், தென்னாப்பிரிக்கா தனது முதல் WTC கோப்பையை வெல்லும் முயற்சியில் ஈடுபடும்.
மழை குறுக்கிட்டால்
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (ஜூன் 12) 25% மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மழை பெய்தால் ரிசர்வ் டே (ஜூன் 16) அன்று போட்டி நடைபெறும். ஒருவேளை ரிசர்வ் டே போட்டி டிராவில் முடிந்தாலோ (அ) மழை குறுக்கிட்டாலோ 2 அணிகளுக்கும் சாம்பியன்ஷிப் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும்.
கமெண்ட்ரி பேனலில் தமிழக வீரர்
இந்தியாவின் ரவி சாஸ்திரி, தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் பிஷப், இயான் ஸ்மித், நசீர் ஹுசைன், கெவின் பீட்டர்சன், மாத்தீவ் ஹைடன், ஸ்டூவர்ட் போர்டு, கிரீமி ஸ்மித், சவுன் பொல்லாக் மற்றும் மெல் ஜோன்ஸ் ஆகியோர் கமெண்ட்ரி பேனலில் உள்ளனர். இதில் தினேஷ் கார்த்திக் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
தென்னாப்பிரிக்கா (விளையாடும் XI): ஐடன் மார்க்ராம், ரியான் ரிகெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரெய்ன்(கேப்டன்), மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி
ஆஸ்திரேலியா (விளையாடும் XI): உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி(கேப்டன்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்