ஐரோப்பா

குப்பை எடுக்கும் பெண்ணை அகற்ற கோரிய பெண்… பதிலடி கொடுத்த புகைப்படவடிவமைப்பாளர்

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃப்ரிட்மேன் என்ற பிரபலமான புகைப்பட வடிவமைப்பாளர், மக்களின் புகைப்படங்களில் சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான திருத்தங்களைச் செய்வதில் பெயர் பெற்றவர்.ஜேம்ஸ் ஃப்ரிட்மேனின் புகைப்பட வடிவமைப்பு சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் , தானாக முன்வந்து தங்கள் புகைப்படங்களை வடிவமைத்து தருமாறு அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் , ஒரு பெண் ஸ்பெயினின் வலென்சியாவில் வரலாற்று நினைவுச்சின்னத்தின் முன் எடுத்த புகைப்படத்தை அனுப்பி தனக்குப் பின்னால் குப்பைகளை எடுப்பவரை அகற்றுமாறு ஃப்ரிட்மேனிடம் கேட்டார். குப்பைகளை எடுப்பவரை அகற்றுமாறு கேட்ட பெண்னுக்கு ஜேம்ஸ் ஃப்ரிட்மேன் சிறந்த பதிலடி கொடுத்துள்ளார்.

Image

அதாவது, புகைப்படத்திலுள்ள குப்பைகளை எடுப்பவரை அகற்றி, அவரது படத்தில் அதிகமான குப்பைகளைச் சேர்த்து பதிலடி கொடுத்துள்ளார் ஜேம்ஸ் ஃப்ரிட்மேன் .உண்மையாகவே துப்பரவு பணியார்கள் இல்லை என்றால் நாம் இல்லை. துப்பரவு வேலைகளைச் செய்பவர்கள் நம் அன்றாட வாழ்வில் எப்படி முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, எப்படி ஒரு புகைப்படத்தை வடிவமைப்பு ‘எடிட்’ செய்யப்படக்கூடாது என்பது பற்றிய முக்கியமான செய்தியையும் அவர் கொடுத்துள்ளார். குறித்த புகைப்படத்தை 14.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளதோடு, கருத்துக்களையும் பதிவுசெய்துள்ளார்கள்.அதோடு ஃபிரிட்மேனின் அறிவார்ந்த செயலுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்