உடலை டாட்டுவால் அலங்கரித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 36 வயதான லினா லோரென்சன் என்ற பெண் தனது தோற்றத்தை முழுமையாக ‘human cyborg ஆக மாற்றியுள்ளார்.
இதற்காக £156,000க்கு மேல் செலவழித்ததாக கூறியுள்ள அவர், 200க்கும் மேற்பட்ட பச்சைகளை குத்தியுள்ளார்.
மேலும் தனது எதிர்கால தோற்றத்தை நிறைவு செய்யும் முயற்சியில் தோலில் பல சப்டெர்மல் உள்வைப்புகளைச் செருகியுள்ளார்.
அவர் தனது ‘உடல் கலை’ பற்றி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், தனது தோற்றத்தால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும், அவர் உடல் மாற்றங்களை நிறுத்த திட்டமிடவில்லை என்றும் இவ்வருடத்தின் பிற்பகுதியில் மேலும் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)