அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்ஸின் பெறுமதியில் வீழ்ச்சி!
அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்ஸின் மதிப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் (நவம்பர்) 26 ஆம் திகதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் பொது நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க வரி அதிகரிப்பு திட்டங்களை ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) முன்வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் வரவு செலவு திட்டத்திற்கு முந்தைய உரையில் அவர் இதனை மறுக்கவில்லை. ஆகவே வரி உயர்வு சாத்தியமான ஒன்றாகவே காணப்படுகிறது.
ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று ஆற்றிய உரையில், சவால்கள் நம் வழியில் வரும்போது, அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதுதான் ஒரே கேள்வி, பதிலளிப்பதா இல்லையா என்பது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வரவு செலவு திட்டத்தில் NHS காத்திருப்புப் பட்டியல்களைக் குறைப்பதிலும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதிலும், தேசியக் கடனைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு தொடர்பில் கேட்கப்பட்டபோது, நாம் அனைவரும் நம் பங்கை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே புதிய வரவு செலவு திட்டத்தில் வரி விதிப்பு தவிர்க்க முடியாததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





