அமெரிக்கா சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் – ஈரான் கண்டனம்!
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் “அதன் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறல்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்த உடனடியாகச் செயல்படவும்” பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகை இன்னும் இந்த அறிக்கைகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





