குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது!
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமை காரணமாக குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.
நாங்கள் அனைத்து வழக்கமான மற்றும் அவசர தூதரக சந்திப்புகளையும் ரத்து செய்துள்ளோம். தூதரகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் நாங்கள் தொடர்பு கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





