செங்கடல் மீது தனது சொந்த விமானத்தையே சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
செங்கடல் மீது அமெரிக்க ஏவுகணை கப்பல் தவறுதலாக அமெரிக்காவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவம் “நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு” என்று விவரித்த பின்னர் விசாரணை நடந்து வருகிறது.
யுஎஸ்எஸ் ஹாரி எஸ் ட்ரூமன் விமானம் தாங்கி கப்பலின் மேல்தளத்தில் இருந்து பறந்து சென்ற உடனேயே எஃப்/ஏ-18 ஹார்னெட் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அமெரிக்க கடற்படைகள் குறித்த பகுதியில் முகாமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)