வெனிசுலாவின் 07ஆவது எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!
வெனிசுலாவின் ஏழாவது எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை அமெரிக்கா நேற்று கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாட்டின் எண்ணெய் வளத்தை ட்ரம்ப் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாகிட்டா (Sagitta) என்ற லைபீரிய (Liberian) கொடியுடன் பயணித்த டேங்கர் கப்பலே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் உத்தரவை மீறி பயணித்த குற்றச்சாட்டுகளின் கீழ் எவ்வித எதிர்ப்பும் இன்றி குறித்த கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க இராணுவ படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான கூடுதல் விவரங்களை பென்டகன் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





