சீனாவின் அணுவாயுதங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்கா
சீனா அமெரிக்காவின் எதிர்பார்ப்பைவிட வேகமாக அணுவாயுதங்களைத் தயாரித்து வருவதாகவும், இப்போது சீனாவிடம் 500க்கும் அதிகமான அணுக்குண்டுகள் உள்ளன என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
2030ஆம் ஆண்டுக்குள் 1,000க்கும் அதிகமான அணுக்குண்டுகள் அதனிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும் அது அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை வைத்திருக்கும் அணுக்குண்டுகளைவிடக் குறைவுதான்.
இப்போது ரஷ்யாதான் ஆக அதிகமான அணுக்குண்டுகளை வைத்திருக்கிறது. அதனிடம் சுமார் 4,500 அணுக்குண்டுகள் உண்டு. 2ஆவது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
அதனிடம் சுமார் 3,700 அணுக்குண்டுகள் இருக்கின்றன. ஸ்டாக்ஹோம் (Stockholm) அனைத்துலக அமைதி ஆய்வு நிலையத்தை மேற்கோள்காட்டி அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அந்த விவரங்களைத் தந்தது.
(Visited 5 times, 1 visits today)