ஸ்பெயினில் விமானப் பயணத்தை இரத்து செய்ய காரணமாகிய மலம்
ஸ்பெயினில் விமானக் கழிப்பறைத் தரையில் மலம் கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனம் ஒன்று பயணத்தை இரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் Tenerife தீவிலிருந்து புறப்படவிருந்த easyJet விமானத்தில் பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர்.
சிறிது நேரத்தில் விமானம் முழுதும் துர்நாற்றம் வீசியதுடன் விமான நிலையத்திலிருந்து துப்பரவாளர்களை அழைக்கவேண்டியிருந்தது.
விமானத்தைச் சுத்தம் செய்யக் கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் நிறுவனம் பயணத்தை இரத்து செய்ததாக கூறப்படுகின்றது.
பயணம் ஏற்கெனவே தாமதமடைந்ததால் பயணிகள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. லண்டனுக்குச் செல்லவிருந்த அவர்களுக்கு Tenerife தீவில் ஹோட்டல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
(Visited 4 times, 1 visits today)