உலகம் செய்தி

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மற்றொரு தாக்குதலை நடத்திய அமெரிக்கா!

அமெரிக்க இராணுவம் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நேற்று மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் கீழ் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருப் பகுதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த கப்பலில் போதைப்பொருள் கடத்தப்பட்டமைக்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க இராணுவம் முன்வைக்கவில்லை.

இதேவேளை குறித்த கடற்பகுதியில் இதுவரை 26 தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான தாக்குதல்களை மனித உரிமை கண்காணிப்பாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!