சீன தயாரிப்பு கார்களை உன்னிப்பாக கண்காணிக்கும் அமெரிக்கா’!
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்களை கடுமையாக கண்காணிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது.
சீன வாகனங்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து வரும் மாதங்களில் தனது துறை சட்டத்தை கொண்டு வரும் என்று அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன வாகனங்கள் அமெரிக்கர்களின் தரவுகளின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இவ்வாறு செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)