இந்தியா

தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் : கனிமொழி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி விடுதியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ‘ திமுக கூட்டனி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தில் தெரிகிறது எனவும் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனியில் இருக்கும் இண்டி கூட்டனி ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும் பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

நிச்சயமாக இந்த கூட்டணி இங்கு மட்டுமின்றி தமிழகத்தில் போட்டியிடும் 40 இடங்களிலும் தெள்ள தெளிவாக இருக்கிறது என குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரே பெயரில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருப்பதை போல் எங்களுக்கு தெரியாது என்றும் மகளிர் உதவி தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது என்றும் சுட்டிகாட்டினார்.

இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் சென்று இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி,போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார். இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் 60 வாங்கலாம் 90% கூட வாங்கலாம் எனவும் கனவு காண்பது அவரது உரிமை ஆனால் வெற்றியை நிச்சயமாக எங்களது வேண்டியனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார் பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள் என்றும் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது., முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள்” என்றார்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே