அமெரிக்காவில் 02 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்பாக்கிய நிலை : நாடு கடத்தப்படும் அபாயம்!
ட்ரம்பின் நாடுகடத்தல் வாக்குறுதிகளில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என்று அமெரிக்க பண்ணை தொழில் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
விவசாயிகள், பால் மற்றும் தயிர் உற்பத்தியாளர்கள், பேக்கிங் தொழிலாளர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் பணிப்புரியும் ஏறக்குறைய 02 மில்லியன் மக்களிடம் சட்டப்பூர்வ தகுதி இல்லை எனக் கூறப்படுகிறது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், வெள்ளை மாளிகையை மீண்டும் வெல்வதற்கான தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான குடியேறியவர்களை சட்டவிரோதமாக நாடு கடத்துவதாக உறுதியளித்தார்.
குடியேற்ற அமலாக்கமானது குற்றவாளிகள் மற்றும் இறுதி நாடுகடத்துதல் உத்தரவைக் கொண்ட நபர்கள் மீது கவனம் செலுத்தும் ஆனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எவருக்கும் விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்று ஹோமன் கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே தொழிலாளர்கள் மேற்படி கோரிக்கை வைத்துள்ளனர்.