வங்கதேசத்திற்கு வருகை தந்துள்ள ஐ.நா குழுவினர் : மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை!
ஐக்கிய நாடுகள் சபையின் குழுவொன்று வங்கதேசத்திற்கு வருகை தந்துள்ளது.
ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முந்திய வன்முறை மற்றும் அமைதியின்மையின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குறித்த குழு வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு ஆதரவை வழங்குவதற்காக ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் தலைவரான ரோரி முங்கோவன் தலைமையிலான சிறிய குழு உறுதியளித்துள்ளது.
இது உண்மையிலேயே இடைக்கால அரசுடன், ஆலோசகர்களுடன், சில அமைச்சகங்களுடன், சிவில் சமூகத்துடன், வங்காளதேச சமூகத்தின் பரந்த பிரிவினருடன், உங்கள் முன்னுரிமைகளைக் கேட்பதற்கான ஒரு ஆய்வுப் பயணம்” என்று முங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)