உலகம்

செயற்கை நுண்ணறிவு அபாயங்களைக் கையாள்வது தொடர்பில் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஐ.நா

செயற்கை நுண்ணறிவு தொடர்பான அபாயங்களையும் அதை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் கையாள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு ஒன்று, ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.அந்தப் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை அக்குழு வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) வெளியிட்டது.

அனைத்துலக அளவில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைக் கவனிக்க ஐநா சென்ற ஆண்டு 39 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது. அக்குழு இப்போது முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து இம்மாதம் நடைபெறவுள்ள ஐநா கூட்டத்தில் கலந்துபேசப்படும்.

பாரபட்சமின்றி செயற்கை நுண்ணறிவைப் பற்றிய நம்பகமான தகவல்களை வெளியிடவும் செயற்கை நுண்ணறிவுக் கூடங்களுக்கும் உலகிற்கும் இடையிலான வேறுபாடுகளைக் கவனிக்கவும் குழு ஒன்றை அமைக்குமாறு செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

UN advisory body makes seven recommendations for governing AI | Technology  News - The Indian Express

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் ஓப்பன்ஏஐ நிறுவனம் 2022ஆம் ஆண்டில் சேட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவுத் தளத்தை வெளியிட்டது. அதிலிருந்து செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெரிய அளவில் வளர்ந்துள்ளதுஅதனால் பொய்த் தகவல்கள், செய்திகள் பரப்பப்படுவது, பிறருக்குச் சொந்தமான பதிவுகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது ஆகியவற்றின் தொடர்பில் கவலைகளும் அதிகரித்துள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், கருவிகள் ஆகியவற்றின் பயன்பாட்டை நிர்வகிக்கும் நோக்குடன் சில நாடுகள் மட்டுமே சட்டங்களை வரைந்துள்ளன.

இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னோடியாக இருந்து விரிவான செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கியது. அதேவேளை, இதன் தொடர்பிலான விதிமுறைகளைப் பின்பற்றுவதை அவரவர் விருப்பத்துக்கு விட்டது அமெரிக்கா.

சீனா சமூக நிலைத்தன்மையையும் அரசாங்கத்துக்கு இருக்கும் ஆதிக்கத்தையும் தொடரச் செய்யும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content