ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் நண்பனை கொலை செய்து இளைஞர் ஏடுத்த விபரீத முடிவு!
ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் நண்பனை கொலை செய்து விட்டு இளைஞனொருவர் தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது.
சென்னை அமைந்தகரை எம் எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞன் (25) அம்பத்தூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் திகதி வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மறுநாள் வரை வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.
அப்போது அவரது தொலைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தால் அச்சமடைந்த அவரது தந்தை, அமைந்தகரை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மகனை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் தனது அக்காவிற்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை செவ்வாய்க்கிழமை (09) அனுப்பி உள்ளார். அதில் “நான் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள போகிறோன், என்னைத் தேட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது அக்கா, உடனே அம்பத்தூர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து வாஞ்சிநாதன் தொலைப்பேசி எண்ணை வைத்து அவர் முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள ஓய்வு விடுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே அம்பத்தூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அவர் தங்கியிருந்த அறையின் கதவு உட்புறமாக பூட்டி இருந்தது. இதனால் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவைத் திறந்து சென்று பார்த்தனர். அங்கு அவர் தரையில் இறந்த நிலையிலும், மற்றுமொரு இளைஞன் தன்னுயிரை மாய்த்த நிலையிலும் இருந்தது தெரியவந்தது.





