இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி முக்கிய செய்திகள்

யாழ்.தொகுதியை முதல்முறையாக இழந்த தமிழ்த் தரப்பு! நாடு முழுவதும் வெற்றி நடைப்போடும் அநுர

இலங்கையில் நடந்த இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

கடந்த செப்ரெம்பரில் அதிகாரத்தைக் கைப்பற்றியஅனுர குமார திஸநாயக்காவின் தேசிய மக்கள் சக்திக்கட்சி நாடளாவிய ரீதியில் பாரிய வாக்குகளைப் பெற்று நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றியைப் பதிவுசெய்கின்ற நிலையில் உள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணத் தொகுதியிலும் அனுர குமாரவின் தேசிய மக்கள் சக்திக் கட்சி வென்றிருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் யாழ்ப்பாணத் தொகுதியைத் தமிழர் அல்லாத கட்சி ஒன்று கைப்பற்றுவது இதுவே முதல்தடவை.

இது பாரம்பரிய தமிழ்க்கட்சிகளுக்குக் கிடைத்த பெரும் பின்னடைவாகக் கொள்ளப்படுகிறது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நல்லூர் தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி முதலிடம் பெற்றிருக்கிறது.

வடக்கு – கிழக்குத் தேர்தல் தொகுதிகள் பலவற்றிலும் தேசிய மக்கள் சக்தி முதனிலையில் இருப்பதை முற்கொண்டு வெளியான முடிவுகள் காட்டுகின்றன.

இன்று அதிகாலை வரை வெளியான மதிப்பீடுகள் அனுர குமாரவின் கட்சி தேசிய ரீதியில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறது. அது எழுபது சதவீதமான வாக்குகளைத் தாண்டும் நிலையில் வெற்றிநடை போடுகிறது.

(Visited 82 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை