இலங்கையில் இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்! பல பகுதிகளுக்கு மழை

இலங்கையில் இலங்கைளில் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக,இம்மாதம் 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் ஹத்திகுச்சி, கலங்குட்டிய, ஹல்மில்லேவ, இபலோகம, பலுகஸ்வெவ, ஹபரணை ஆகிய பகுதிகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.