ஸ்பெயினில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு
ஸ்பெயினில் சொந்த குடிமக்களின் எண்ணிக்கையை விட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய ஸ்பானிய குடிமக்களின் எண்ணிக்கையை விட வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை 20 மடங்கு வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்பெயின் குடிமக்களின் மொத்த மக்கள் தொகை கணிசமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அண்மைய தரவுகளின்படி வரலாற்றில் முதன்முறையாக ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகை 49,153,849 ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மொத்த மக்கள் தொகை 75,865 ஆக அதிகரித்துள்ளது.
இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 95,363 ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய மொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6,947,711 ஆக உள்ளது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில் ஸ்பெயின் குடிமக்களின் எண்ணிக்கை 19,498 ஆல் குறைந்துள்ளது.
இதன்மூலம், வெளிநாட்டவர் சமூகத்தின் வளர்ச்சி விகிதம் ஸ்பெயின் குடிமக்களின் வளர்ச்சி விகிதத்தை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது.
ஸ்பெயினில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட குறைவு மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால், வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
வெளிநாட்டவர்களின் வருகையால் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூகப் பாதுகாப்பு நிதிக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குவதாகப் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.




