இலங்கையில் தொடரும் போராட்டம் – கடும் நெருக்கடியில் நோயாளிகள்

இலங்கையில் சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்வதால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று காலை 6.30 முதல் முதல் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்டது.
இருந்த போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுவர், புற்றுநோய், சிறுநீரக மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(Visited 13 times, 1 visits today)