பாரிஸ் நகரில் கத்திக்குத்து சம்பவம் ; காவல்துறை அதிகாரி படுகாயம்
பாரிஸ் நகரில் கடைத் தொகுதிகள் இருக்கும் பிரபலமான இடமான ‘ஷோன்செலிசே’ பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 19) கத்தியால் ஒருவர் தாக்கியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஒரு நவீன அணிகலன் விற்கும் கடையில் இருந்த பாதுகாவலர் ஒருவர், கத்தியுடன் ஒருவர் இருப்பதைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார் என்று பாரிஸ் நகர காவல்துறைத் தலைவர் லாரென்ட் நுனெஸ் தெரிவித்தார்.தாக்கியவரும் காயம் அடைந்ததாக அவர் தெரிவித்தார்.
பாரிஸ் நகரில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜூலை 26ஆம் திகதி தொடங்குகின்றன.
இதையொட்டி விளையாட்டு வீரர்கள், உலகத் தலைவர்கள் உட்பட மில்லியன் கணக்கானவர்கள் பாரிஸ் நகருக்கு வருகின்றனர். இதனால் அந்நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘ஷோன்செலிசே’ பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக் கொண்டது.