கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ள தென்கொரிய அரசு
கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் தென்கொரிய பிரிவிக்கு இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பான சட்ட விதிகளை மீறியதற்காக அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது தென்கொரிய அரசு.
கூகுளின் கொரிய பிரிவுக்கு 3 மில்லியன் யுவான் அபராதமாகவும் ஆப்பிளுக்கு 210 மில்லியன் யுவான் அபராதமாக விதித்துள்ளத கொரிய தொலைத்தொடர்பு ஆணையம்.
இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பான விதிகளை மீறிய கூகுள், ஆப்பிள் உள்பட 188 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2022ல் திருத்தப்பட்ட இருப்பிட தகவல் பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கமான சோதனையின் போது இந்த நிறுவனங்களின் மீறல் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் கிம் ஹோங்-ல், தனிநபர்களின் தனியுரிமை மற்றும் சமூக பாதுகாப்பு மீது அக்கறை கொண்டிருப்பது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)