ஜெர்மனியில் சமூக உதவியாளராக பணியாற்றும் நபரின் அதிர்ச்சி செயல்
ஜெர்மனியில் சமூக உதவியாளராக பணியாற்றும் ஒருவர் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டதன் காரணமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் டுயிஸ்பேர்க் மாவட்ட நீதிமன்றமானது சமூக உதவியாளராக பணியாற்றிய ஒருவருக்கு 2 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதது
டுயிஸ்பேர்க் மாவட்ட நீதிமன்றமானது இன்டர்கிருசியுர் எல்பர் என்று சொல்லப்படுகின்ற சமுதாயத்தில் சில உதவிகளை புரியும் அமைப்பினுடைய உதவியாளருக்கே இவ்வாறு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த நபரானவர் 492 குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றவியல் சம்பவங்களின் ஊடாக இவர் 659000 யுரோக்களை மோசடி செய்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றமானது இவரை குற்றவாளியாக இனம்கண்டு இருந்தது.
இந்நிலையில் இவர் தான் ஏற்கனவே மோசடி செய்த பணத்தின் பெரும் பகுதியை திருப்பி ஒப்படைத்த காரணத்தினால் மிகுதி 2 லட்சம் யுரோக்களையும் 4 வருடங்களில் இவர் தீருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற கடப்பாடுடன் நீதிமன்றமானது இந்த தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.