இலங்கையில் மரணச்சடங்கில் பங்கேற்றவருக்கு வீடு திரும்பும் போது காத்திருந்த அதிர்ச்சி

கேகாலை தேவாலகம பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரிதொரு நபரால் தாக்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் மரணச்சடங்கொன்றிற்காக சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)