ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கப்பல் கடலில் மூழ்கியது!

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் மூழ்கியதாக அதிகாரிகள் இன்று (03.02) அறிவித்துள்ளனர்.
காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரின் ஒரு பகுதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்ட முதல் கப்பல் இதுவாகும்.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் முக்கியமான நீர்வழிப்பாதையான பாப் எல்-மண்டேப் ஜலசந்தி பகுதியில் பெப்ரவரி 18 ஆம் திகதி குறித்த கப்பல் மூழ்கியது.
(Visited 11 times, 1 visits today)