உலகையே பேசவைத்துள்ள டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாதுகாப்பு

உலக பணக்காரர்கள் ஐவரை கொன்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து உலகம் முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாதுகாப்பு குறித்து ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்பியதால் விவாதம் சூடுபிடித்துள்ளது.
மேலும், தனியார் துறையின் ஆழ்கடல் ஆய்வை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது, இன்று அது பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ஆழ்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி தொலைவில் அதன் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.
(Visited 13 times, 1 visits today)