விரைவில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பின்லாந்து அதிபர்!
பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், அக்டோபர் 28-31 வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வார் என்று ஃபின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
விஜயத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டப் இருதரப்பு உறவுகள் மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் மற்றும் பிற பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார் என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பால்டிக் கனெக்டர் எரிவாயு குழாய்க்கு ஏற்பட்ட சேதத்தில் ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலின் சாத்தியமான பங்கு குறித்து பின்லாந்தும் சீனாவும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நுட்பமான இராஜதந்திரத்தில் ஈடுபட்டுள்ளன.
(Visited 3 times, 1 visits today)