முக்கிய தீர்மானம் எடுக்க தயாராகும் ஜனாதிபதி

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரை மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, அந்த பதவிக்கு சாகல ரத்நாயக்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருகின்றார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் இடத்துக்கே சாகல நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராகவும் ஜனாதிபதி பணியாளர் குழாமின் பிரதானியாகவும் சாகல ரத்நாயக்க தற்போது செயற்படுகின்றார்.
ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்று கருதப்படுவதால் அதற்கு முன்னதாக அரச நிர்வாக சேவையில் பல மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
(Visited 13 times, 1 visits today)