இலங்கையின் நோக்கத்தை வெளியிட்ட ஜனாதிபதி
வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்க்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான அபிவிருத்தி சபை சம்மேளனத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள
தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளின் பாதையை பின்பற்றி, வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதன் மூலம் பொருளாதாரத்தை மறுசீரமைப்பான இலங்கையின் முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





