ஜெர்மனியில் வாடகை குடியிருப்புகளில் வாழ்பவர்களின் பரிதாப நிலை – அறிமுகமாகும் புதிய வசதி
ஜெர்மன் நகரங்களில் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் தாங்கள் அதிக வாடகையைச் செலுத்துகிறார்களா என்பதை இனிமே கண்டறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் இடதுசாரி கட்சி அறிமுகப்படுத்திய புதிய ஒன்லைன் கால்குலேட்டரைப் பயன்படுத்தி, இதனை கண்டுபிடிக்க முடியும்.
பெர்லின், லீப்ஜிக், ப்ரீபர்க் மற்றும் ஹாம்பர்க்கில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் சுரண்டக்கூடிய வகையில் அதிக வாடகை பெறுகின்றார்களா என்பதைக் கண்டறிய Die Linke ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
ஒன்லைனில் தங்களுடைய குத்தகையைப் பற்றிய அடிப்படைத் தகவலை உள்ளிடுவதன் மூலம், கால்குலேட்டர் பயனர்கள் வாடகைச் சுரண்டல் தொடர்பான வழக்கை உள்ளூர் வீட்டு அதிகாரசபையில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இது கணக்கீட்டிற்குப் பிறகு ஒரு முறை இணைப்பை அழுத்தி செய்ய முடியம்.
ஒரு வீட்டு உரிமையாளர் இரண்டு சட்ட வரம்புகளை மீறினால் வாடகை சுரண்டலுக்குள்ளாகுவார்கள்.
வாடகைக்கு தங்கியிருப்பவர்களிடம் உள்ளூர் ஒப்பீட்டு வாடகையை விட 20 சதவீதம் வசூலிக்கும் நில உரிமையாளர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.