700 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
அடுத்த வேளை உணவு கிடைக்குமா? மறுபடியும் சாப்பிடுவோமா? என தெரியாத அச்ச நிலையில் உலகில் உள்ள 700 மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாட்டு உணவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது.
உணவுக்கான தேவை அதிகரிக்கிறது. ஆனால் மனிதாபிமான உதவிக்கான நிதி குறைவதாக அமைப்பு சொன்னது.
நிதிப் பற்றாக்குறையால் பல மில்லியன் மக்களுக்கான உணவைக் குறைக்க வேண்டியுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் கூறினார்.
இதுவே புதிய வழக்கநிலை என்று அவர் குறிப்பிட்டார். 50க்கும் அதிகமான நாடுகளில் கிட்டத்தட்ட 47 மில்லியன் பேர் பஞ்சத்தால் அவதியுறும் நிலையில் உள்ளனர்.
5 வயதுக்கு உட்பட்ட 45 மில்லியன் பிள்ளைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டை, பொருளியல் நெருக்கடி, பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் உர விலைகள் ஆகியவை அதற்குக் காரணமாகும்.
COVID-19 நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பாலும் உக்ரேன் போராலும் உணவு விலைகள் பாரிய அளவில் உயர்ந்துள்ளன.