பிரான்ஸில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்!

பிரான்சில் இலகுரக விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பிரான்ஸின் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 41 times, 1 visits today)