சூடானில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது!

சூடானில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று ஐ.நா. இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நடக்கும் பல உள்ளூர் மோதல்களால் தற்போதைய போர் தொடங்குவதற்கு முன்பு 2.83 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறியது.
2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு விரட்டப்பட்டுள்ளனர், பெரும்பாலும் அண்டை நாடுகளான சாட், தெற்கு சூடான் மற்றும் எகிப்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடானின் மோதல் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது, இராணுவத் தலைவர்களுக்கும் சக்திவாய்ந்த துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான பதட்டங்கள் தலைநகர் கார்ட்டூம் மற்றும் நாட்டின் பிற இடங்களில் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)