ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வட கொரிய ஜனாதிபதி
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் ரஷ்யா பயணம் இன்றுடன் முடிவடைந்தது.
அவர் ரஷ்யாவில் 06 நாட்கள் தங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், வடகொரிய தலைவர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் செர்ஜி ஷோய்குவை சந்தித்தார்.
இதன்போது அவர் ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை பார்வையிட்டார்.
இதற்கிடையில், ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வடகொரிய அதிபருக்கு ப்ரிமோரி பிராந்திய ஆளுநர் சிறப்பு பரிசு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 4 times, 1 visits today)