உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படவுள்ளது!
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு நாளைய (04.10) தினம் அறிவிக்கப்படவுள்ளது.
இதில் வெற்றிப்பெறுபவர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல் அன்னை தெரசா வரையிலான மதிப்புமிக்கவர்களின் வரிசையில் இடம்பிடிப்பார்கள்.
அமைதி பரிசுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2018 முதல் அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள அரசியல்வாதிகளால் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்தமை, மற்றும் உக்ரைன் – ரஷ்யா அமைதி பேச்சுவார்தை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசுகள் 19 ஆம் நூற்றாண்டின் தொழிலதிபர் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





