இலங்கையில் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதுமே போராட்டங்கள்!

இலங்கை அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதும் பெற்றோருடன் இணைந்து பாரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிப்பது, பாடசாலை மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்விச் செலவுகளை தேவையில்லாமல் சுமத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.
அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் சுமை பெற்றோர்கள் மீது மறைமுகமாக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
(Visited 10 times, 1 visits today)