சிங்கப்பூரில் அமுலாகும் புதிய திருத்த சட்டம்.. மீறினால் அபராதம்
சிங்கப்பூரில் இன்று முதல் மது பிரியர்களுக்கு புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வரவுள்ளது.
இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவைகள் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்வது நாளை ஜனவரி 2 முதல் குற்றமாகும்.
அதாவது Shopee மற்றும் GrabFood போன்ற மின்னணு வணிக தளங்கள், பொதுமக்கள், வர்த்தகங்கள் உட்பட இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவை வழியாக இனி மதுபானம் விநியோகம் செய்ய உரிமம் தேவை.
தொலைத்தொடர்பு சேவைகள் என்பது, தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற இணைய சேவைகளை குறிக்கின்றது. மது விநியோகம் செய்வோரும் மின்னணு வணிக தளங்களும் மது வாங்கும் நபர்களின் வயதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.
அவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் மதுபானம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். சட்டத்தை மீறினால் என்ன தண்டனையை சந்திரிக்க நேரிடும் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
விதிகளை மீறும் நபர்களுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த சட்டம் விநியோகம் செய்வோருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.