இலங்கை

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் !

தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் நில்வள, குடா, ஜின் கங்கைகளில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால், குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நில்வள கங்கைக்கு அருகிலுள்ள கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

அத்துடன், குடா கங்கைக்கு அருகிலுள்ள பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது

அதேவேளை, ஜின் கங்கைக்கு அருகிலுள்ள வெலிவிட்டிய திவித்துர, பத்தேகம, நியகம நெலுவ, தவலம, நாகொட, எல்பிட்டிய பொப்பே பொட்டல பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக செயற்பட வேண்டுமென தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!