பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் தீர்க்கப்பட்டது – கப்பல்கள், விமானங்கள் மாயமானதன் பின்னணி இதுதான்!

பல ஆண்டுகளாக, 50-க்கும் மேற்பட்ட கப்பல்களும், 20-க்கும் மேற்பட்ட விமானங்களும், அமெரிக்காவின் ஃப்ளோரிடா, பெர்முடா, கிரேட்டர் ஆன்டில்லஸ் பகுதிகளுக்கு இடையே உள்ள பெர்முடா முக்கோணப் பகுதியில், மர்மமான முறையில் காணாமல்போயுள்ளன.
இதனால் குறித்த பகுதியை சுற்றி மர்மங்கள் சூழந்திருப்பதாக பல ஆண்டுகளாக கதைகள் புனையப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு விஞ்ஞானியான கார்ல் க்ரூசெல்னிக்கி, இந்தப் பகுதியில் நடக்கும் விபத்துகளுக்குப் பின்னால், இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்கள் (supernatural explanations) இல்லை என்று கூறுகிறார். மாறாக, அதிக அளவிலான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தும், இயற்கையான காரணங்களும்தான் இதற்கு முக்கியக் காரணம் என விளக்கியுள்ளார்.
அவருடைய கோட்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தற்போது சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் ஆய்வாளர் டாக்டர் சைமன் பாக்சால் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளே காரணம் எனக் கூறுகிறார்.
அங்கு கப்பல்கள் காணாமல்போவதற்கு முரட்டு அலைகள் அல்லது தீவிரமாக தோண்றும் அலைகளே காரணம் என விவரிக்கிறார்.
அங்கு தோண்றும் அலைகள் சுமார் 100 அடி (30 மீட்டர்) வரை உயரும், முரட்டு அலைகள் அசாதாரணமாக செங்குத்தானவை மற்றும் நிலவும் காற்றைத் தவிர வேறு திசைகளிலிருந்து எதிர்பாராத விதமாகத் தாக்கக்கூடும் எனவும் அவர் கூறுகிறார்.
அத்துடன் இந்த கொடிய அலைகளில் ஒன்றால் சிக்கிய ஒரு பெரிய கப்பல் ‘இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் மூழ்கக்கூடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேனல் 5 ஆவணப்படத் தொடரான தி பெர்முடா டிரையாங்கிள் எனிக்மாவில் பேசிய டாக்டர் பாக்ஸால், பெர்முடா முக்கோணம் முக்கோண அலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடமாகும் என்றும், தெற்கு மற்றும் வடக்கே புயல்கள் உள்ளன, அவை ஒன்றாக வருவதால் இராட்சத அலைகள் செங்குத்தாக மேல் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே அப்பகுதியில் பயணிக்கும் விமானங்கள், கப்பல்கள் மாயமாகுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.