MH370 விமானம் மாயமானதன் பின்னணியில் இருக்கும் மர்மம் தீர்ந்தது!
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் திடீரென மாயமனா MH370 விமானத்தின் பின்னணியில் இருக்கும் நீண்டநாள் மர்மம் Google Maps மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
கம்போடியா காடுகளின் ஆழமான இருண்ட பகுதியில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் ‘விமானத்தை கண்டுபிடித்த பிறகு மர்மத்திற்கான விடை கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர் இயன் வில்சன், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் 239 பேருடன் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எச்சங்கள் கம்போடியாவில் உள்ள ஒரு காட்டில் ஆழமாக சிதறிக் கிடப்பதாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.
கூகுள் பார்வையை அளவிடும்போது, நீங்கள் சுமார் 69 மீட்டரைப் பார்க்கிறீர்கள், ஆனால் விமானத்தின் வால் மற்றும் பின்புறம் இடையே இடைவெளி இருப்பது போல் தெரிகிறது. இது சற்று பெரியது என அவர் தனது விளக்கத்தை முன்வைத்துள்ளார்.
விமானம் விழுந்த பகுதி ஒரு பசுமையான இருண்ட பகுதியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை இந்த விடயம் உண்மையாக இருந்தால் விமானம் விழுந்து விபத்துக்குளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் உர்ஜிதப்படுத்தப்படும். ஆகவே இந்த கண்டுப்பிடிப்பு இது தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க புதிய உத்வேகத்தை தரும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் விமானம் புறப்பட்டது. ஆனால் அது மலேசிய மற்றும் வியட்நாமிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையே கைமாறியபோது காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.