24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இமதுவ பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சார விநியோகத்தை சட்டவிரோதமாக தட்டியதாகவும், பாதிக்கப்பட்டவரை மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்ய கவனமாக திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர் 50 வயதுடைய இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
(Visited 10 times, 1 visits today)