சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு வழங்கிய பணத்தில் முறைக்கேடு!
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு வழங்கிய பணம் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று (27.07) காலை கிரிகெட் நிறுவனத்தை ஆர்ப்பாட்டகாரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதாகவும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த முறைகேடுகளுக்கு கிரிக்கெட் அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு பணத்தை வழங்குவது யாருடைய தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும், இலங்கையில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக ஆட்சியாளர்கள் பணத்தை தங்களின் தவறான பாவனைக்கு பயன்படுத்துகின்றனர் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.