ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதிய மருத்துவ சங்கம்!

மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் வைத்தியர்கள் இன்று (28.06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன,மிக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கடமை. இது இடம்பெறாதது வருத்தத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)